Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்” ஆன்லைன் பண மோசடியில் சிக்கிய 2 பேர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தனியார் நிறுவனத்தின் பணத்தை மோசடி செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து  கடந்த 14-ஆம் தேதி சுமார் 1  கோடியே 10 லட்ச ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நிறுவன அதிகாரிகள் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பணத்தை மோசடி செய்தது கொல்கத்தாவை சேர்ந்த சபீர் அலி, கிருஷ்ணகுமார் பிரதாப் என்ற 2 பேர் என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினர் கொல்கத்தாவிற்கு விரைந்து சென்று அவர்கள் 2 பேரையும் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த 35 லட்ச ரூபாய் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். இந்த ஆன்லைன் கொள்ளை கும்பலுக்கு பின்னால் வெளிநாட்டை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களது வங்கி கணக்குகளை பத்திரமாக பராமரிக்க வேண்டும் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |