வரி ஏய்ப்பு குறித்து தகவல் கொடுக்கும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வெகுமதி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் வணிகவரித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிகவரித்துறையில் மானிய கோரிக்கையின் போது வரி ஏய்ப்பு குறித்து தகவல் தெரிவிக்கும் பொது மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் வெகுமதி வழங்க 20223 ஆம் நிதி ஆண்டில் 1.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமைச்சர் மூர்த்தி அறிவித்தார்.
இந்த அறிவிப்பை தற்போது செயல்படுத்தும் விதமாக தமிழக அரசுக்கு அறிக்கை ஒன்றை வணிக வரித்துறை ஆணையர் அனுப்பியுள்ளார். அதன்படி பொதுமக்கள் வரி ஏய்ப்பு குறித்து தகவல் கொடுத்தால் அதன்மூலம் வரிவசூல் செய்யும் 1 லட்சத்துக்கு மேற்பட்ட இழப்பு தொகையில் 10% வெகுமதியாக தரப்படும். அதேபோல இடைக்கால வெகுமதியாக 5 சதவீதம் அல்லது 10 ஆயிரத்துக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.