Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பொதுமக்கள் கவனத்திற்கு” இப்படி தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும்…. மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிக்கை….!!!!

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்கள் மற்றும் இந்து  அமைப்புகள் சார்பில் வருகின்ற 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா நடக்கிறது.  அதன்பின்னர் அந்த சிலைகள் நீர் நிலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்படும். இந்த விழாவில்  9.8.2018 அன்று நமது தமிழக அரசு வெளியிட்ட ஆணையின் அடிப்படையில் மட்டுமே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும்.

மேலும் விநாயகர் சிலையை வைக்க விரும்பும் இந்து அமைப்பினர்  குறிப்பிட்டுள்ள படிவத்தை பூர்த்தி செய்து வருகின்ற 23-ஆம் தேதிக்குள் உதவி ஆட்சியரிடம் கொடுக்க வேண்டும். மேலும் விநாயகர் சதுர்த்தி விழாவில் மேற்கொள்ளப்படும் நெறிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் https: Tiruvannamalai.nic .in என்ற  இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Categories

Tech |