பாஸ்போர்ட் அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஏராளமான பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்களுக்கு காவல்துறை அனுமதி சான்றிதழ் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனால் பொதுமக்கள் எளிதில் விண்ணப்பிக்கும் முறையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு உட்பட்ட சாலிகிராமம், அமைந்தகரை, தாம்பரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகங்களில் 1,400- க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கையாளப்பட உள்ளது . எனவே மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.