திருப்பத்தூரில் பொது கழிவறையை சுத்தம் செய்யாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் 32-வது வார்டு கவுதம் பேட்டையில் சுமார் 400 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலான வீடுகளில் தனிநபர் கழிபறை கிடையாது. இதனால் அங்குள்ள பொதுக்கழிப்பறையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கழிபறையில் போர்வெல் மூலம் தினமும் சுத்தம் செய்யப்படும்.
இந்நிலையில், கடந்த 8 நாட்களுக்கு முன்பு போர்வெல் இயந்திரம் பழுது ஏற்பட்டது. இதனால் கழிவறைக்கு தண்ணீர் வரவில்லை என்பதால். அப்பகுதி பெண்கள் பொது கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை நகராட்சி அலுவலகத்திற்கு சென்று கமிஷனர் சுதாவிடம் தெரிவிக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது அவர் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் துப்புரவு சம்பந்தப்பட்ட ஊழியர்களையும் சந்திக்க முடியாததால் . இதனையடுத்து இன்று காலை 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த திருப்பத்தூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.