Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“பொதுமக்கள் தாங்களாகவே முன்வரவேண்டும்” ….. அதிரடியாக உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்….!!!!

ஆக்கிரமிப்பு நிலத்தில் இருக்கும் வீடுகளை அகற்ற உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.மருதூர்  பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில்   நகராட்சி நிர்வாகம் சார்பில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல்  கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நீதிபதி ஏரியில் பாதாள சாக்கடை  சுத்திகரிப்பு நிலையம் அமைக்க  தோண்டப்பட்ட பள்ளத்தை உடனடியாக  நகராட்சி அதிகாரிகள் மூட வேண்டும். மேலும் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் அனைத்து வீடுகளையும்  அகற்ற வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார். இந்நிலையில்  மணி நகர், காளியம்மன் கோவில் தெரு, ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதிகளில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருக்கும் வீடுகளை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அகற்ற வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

Categories

Tech |