உக்ரைன் படையெடுப்புக்கு எதிராக விமர்சனம் செய்யும் நண்பர்கள், உறவினர்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு தகவலளிக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சிறப்பு தொலைபேசி எங்களை வெளியிட்டுள்ள ரஷ்ய நிர்வாகம், உண்மையான ரஷ்ய குடிமக்கள் இணையபக்கம் ஊடாகவும் துரோகிகளை அடையாளப்படுத்த கோரியுள்ளார். இம்முடிவு ரஷ்யாவை 1937 காலக் கட்டத்திற்கு இட்டுச் சென்றதாக விளாடிமிர் புதின் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.
சோவியத்கால சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின் தங்கள் கட்சி நடவடிக்கைகளுக்கு எதிராக பேசும் பொதுமக்கள் மீது நடவடிக்கை முன்னெடுக்க இதேபோல யுத்திகளை பயன்படுத்தியுள்ளார். மேலும் 1936-1938 வரையான காலக் கட்டத்தில் கடும்போக்கு நடவடிக்கையால் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் சிறைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இந்நிலையில் ஏறத்தாழ 100 வருடங்களுக்கு பின் அதே கடும்போக்கு நடவடிக்கையை விளாடிமிர் புடின் இப்போது முன்னெடுக்கவுள்ளார். அவ்வாறு அளிக்கப்படும் தகவல்கள் மற்றும் புகார் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
மாஸ்கோவில் 22 வயது வாலிபர் ஒருவர் உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிரான விமர்சனம் முன் வைத்ததாக சொல்லி 24 மணிநேர சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டு உள்ளார். இதேபோல் மதுபான விடுதியில் ஏற்பட்ட விவாதம் ரஷ்யாவுக்கு எதிராகவும் இராணுவத்தினை குறை மதிப்பிட்டதாகவும் சொல்லி இளம்பெண் ஒருவர் இரவு முழுவதும் சிறை வைக்கப்பட்டதுடன் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளார். ரஷ்யாவில் தற்போது பொதுமக்கள் கடும் பீதியில் வாழ்ந்து வருவதாகவும் 1937 காலகட்டத்தில் வாழ்வது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் ரஷ்ய மனிதஉரிமைகள் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.