Categories
மாநில செய்திகள்

பொதுமக்கள் புகார் அளிக்க…. முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.  இதையடுத்து உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் மக்கள் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில் உடனடியாக தீர்வு காணப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வரிடம் பொதுமக்கள் நேரடியாக புகார் அளிக்க வசதியாக முதல்வரின்
தனிப்பிரிவு இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் தங்களது புகார்களை http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம்.

Categories

Tech |