Categories
தேசிய செய்திகள்

பொதுமக்கள் மீது காரை ஏற்றிய சம்பவம்…. உத்திரபிரதேசத்தில் பரபரப்பு நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ….!!!

சத்தீஸ்கரில் பொதுமக்கள் மீது காரை ஏற்றியதில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென்று வந்த கார் ஒன்று விவசாயிகள் மீது மோதியதில் விவசாயிகள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசீஸ் மிஸ்ரா என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு குறைவதற்கு தற்போது சத்தீஸ்கர் மாநிலம் ஜோத்பூரில் துர்கா பூஜை கொண்டாடிக் கொண்டிருந்த மக்கள் மீது வேகமாக வந்த கார் ஒன்று மோதியதாக கூறப்படுகிறது. இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

https://twitter.com/amitmalviya/status/1448979099729506309

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார் ஓட்டுனரை கைது செய்தனர். முன்னதாக மக்கள் ஓட்டுநரை பிடித்து அடித்து உதைத்து அத்துடன் அந்தக் காரையும் தீயிட்டுக் கொளுத்தியதாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் பப்லு விஸ்வகர்மா மற்றும் சிசுபால் சாகு என்பது தெரியவந்தது இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு டுவிட்டரில் பதிவிடப்பட்டுள்ளது. இதனை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் அமித் மால்வியா வெளியிட்டுள்ளார். இந்துக்கள் மீதான வகுப்புவாத தாக்குதலில் இரண்டாவது சம்பவம் என்று தெரிவித்துள்ள அவர் உத்தரபிரதேச அரசியலில் தடம் பதிக்க விரும்பும் பிரியங்கா காந்திக்கு உதவுவதில் முதல்வர் பூபேஷ் பாகல் பிஸியாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Categories

Tech |