நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரிப்பதன் காரணமாக 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வெளியே செல்ல வேண்டாம் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம். வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்ற வேண்டும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று அறிவித்துள்ளது.