Categories
மாநில செய்திகள்

“பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டால்”… டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை…!!!!!

தமிழகத்தில் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவர்கள் எனவும் சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, சில அமைப்புகளை சேர்ந்தவர்களின் வீடுகள் வாகனங்களில் மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசிய வழக்குகளில் புலன் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேலும் குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு தொடர்பாக இதுவரை 250 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து 100 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய  சிலர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த 3000 போலீஸர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். மேலும் மாநில கமேண்டோ பிரிவு சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் என கூடுதலாக 3500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.

Categories

Tech |