Categories
அரசியல் மாநில செய்திகள்

பொது அறிவு கூட இல்லையா ? நாளைக்கே செய்யுங்க பாப்போம்…. சவால் விட்ட முக.ஸ்டாலின் …!!

7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ஆளுநரின் அனுமதி பெறுவாரா ? முதலமைச்சர் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஒரு மாத காலம் ஆன பிறகும் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. ஆளுநருக்கு கடிதம் அனுப்பினேன். ஆளுநர் அலட்சியம் காட்டினால் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன் .

எனது கடிதத்திற்கு பதில் அளித்த பதிலில் ஆளுநர் சொன்ன நான்கு வார கால அவகாசம் அதிகம் என்பதால் ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த திமுக திட்டமிட்டது. இது ஜனநாயக கடமை. ஆனால் அரசியல் ஆதாயம் தேடும் செயல் என முதலமைச்சர் சொல்கிறார். சேர்ந்து போராட முதலமைச்சரையும் அழைத்தேனே?  அரசியல் ஆதாயம் தேடுவதற்கு அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட மசோதாவை தாமதம் செய்யாமல் நிறைவேற்று என்றா சொல்வார்கள் ? குறைந்தபட்சம் பொது அறிவு கூட முதலமைச்சருக்கு இல்லை ?

எங்களுடைய கண்ணுக்கு தெரிவது அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கால நலனே அன்றி அதில் அரசியல் என்பது அறியாமை. தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படுவது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகுதான். இவர் தன்னுடைய அருகதையை- யோக்கிதையை நிரூபிக்க வேண்டுமானால் நாளையே அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநரின் அனுமதி பெறட்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Categories

Tech |