பூங்காவில் வைத்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரிட்டன் மான்சென்ஸ்டரின் Wythenshawe-வில் இருக்கும் Kirkup Gardens பூங்காவில் வைத்து மர்ம நபர்கள் 20 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து தலைமை ஆய்வாளர் காரா சார்லஸ்வொர்த் கூறுகையில் பொது இடத்தில் வைத்து இந்த வன்கொடுமையில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.
மேலும் அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த சம்பவத்தை யாரேனும் பார்த்திருந்தால் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் பூங்கா பராமரிப்பில் எந்த குறைபாடும் இல்லை என்றும் அது மிகவும் பாதுகாப்பாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.