Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொது இடங்களில் இதை செய்யக்கூடாது…… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

பொது இடங்களில் நின்று புகை பிடிப்பவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் அருணா பொது இடங்களில் புகை படிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தங்கள், உணவு விடுதி, மருத்துவமனை வளாகம், பேக்கரி உள்பட பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது புகை பிடிப்பதற்கு அனுமதிக்கும் கடை உரிமையாளர்கள் மற்றும் புகை பிடிப்பவர்களை அதிகாரிகள் கண்டறிந்து தலா 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இதனை அடுத்து மளிகை மற்றும் பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து பொது இடங்களில் யாரும் புகை பிடிக்க கூடாது எனவும், அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |