பொது இடங்களில் புகை பிடித்தவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர்கள் சண்முகசுந்தரம், பூபதி, சங்கரன் ஆகியோர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொது இடங்களில் புகைபிடித்த குற்றத்திற்காக பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
இதனை அடுத்து புகை பிடித்தல் தடை செய்யப்பட்ட பகுதி என்று பதாகைகள் வைக்காத வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களிடமிருந்தும் அதிகாரிகள் அபராதம் வசூல் செய்தனர். இவ்வாறு அவர்களிடம் இருந்து 1100 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.