சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் சுவரொட்டி ஒட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை மாநகராட்சி சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகிறது.
இதனால் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் அரசு விளம்பரங்கள் மீது வேறு சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றது. எனவே இவ்வாறு ஒட்டுவதை தவிர்த்து தூய்மையாக பராமரிக்க பொதுமக்கள் தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பேருந்து நிறுத்த நிழற்குடை, தெருக்களின் பெயர்ப்பலகைகள், அரசு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ள சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன.