தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து புதிய கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றது. தற்போது ரயில்வே நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் ஆவி பிடிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து பொது இடங்களில் நீராவி பிடிக்கும் முறையை மக்கள் கைவிட வேண்டும். அவ்வாறு பொது இடங்களில் ஆவி பிடிப்பதன் மூலம் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.