Categories
சினிமா தமிழ் சினிமா

“பொது இடத்தில் இப்படியா பேசுறது”…. பலரும் கண்டனம்…. வெடிக்கும் சர்ச்சை…!!!!!

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜயின் நடிப்பில் பிரமாண்ட பட்ஜெட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் யானை. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இருக்கின்றது. அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கின்றார்.

மேலும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, ராதிகா சரத்குமார், ஜெயராம், ராஜேஷ், ஜெயபாலன், தலைவாசல் விஜய் இமான் அண்ணாச்சி போன்றோர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ஜூன் 17ஆம் தேதி ரிலீசாக இருக்கின்றன. இந்த படத்தின் டிரைலர் நேற்றைய தினம் வெளியாகி உள்ளது. இந்த ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது யானை படத்தின் கதை  சூர்யாவிற்க்காக எழுதப்பட்ட கதையா என்று கேட்கப்பட்டிருந்தது. அதற்கு ஹரி  ‘அருவா’அங்கேயே தான் இருக்கு.

எப்ப வேணும்னாலும் கையிலே எடுக்கலாம். சில காரணங்களுக்காக படம் தள்ளிப் போய் இருக்கும் என தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் இருக்கும் ஆக்ஷன் காட்சிகளை பற்றி ஹரி பேசும்போது சற்று உணர்ச்சிவசப்பட்டு பதிலளித்துள்ளார். அப்போது ஹீரோ அடிப்பதை பற்றி பேசும்போது Flowல கெட்டவார்த்தை பேசி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதன் பின் அனைவரும் சிரித்ததைப் பார்த்து பேசுவதை நிறுத்திய  ஹரி என்ன சொன்னேன் நான் இப்ப  என கேட்க அவரது ரியாக்ஷனை பார்த்து அனைவரும் சிரித்தனர்.

மேலும் மேடையிலிருந்த அருண்விஜய், பிரியா பவானி சங்கர் போன்றோரும் சிரித்தனர். தற்போது இந்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைப் பார்த்த பலரும் பொது இடங்களில் இப்படியா பேசுவது என கண்டனங்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

Categories

Tech |