பொது இடத்தில் சிறுநீர் கழித்ததால் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உத்தரபிரதேச மாவட்டத்தில் உள்ள பஹ்ரை மாவட்டத்தை சேர்ந்த சுஹைல் என்பவர் தனது மாமாவின் வீட்டிற்கு சென்றிருந்த சமயம் வீட்டின் முன்பு சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த ஆத்மரம், ராம், ராம்பால், சனேஹி, மஞ்சித் ஆகிய 5 பேரும் சுஹைல் தட்டி கேட்டனர். இதனால் அவர்கள் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் சுஹைலை ஐவரும் தாக்க அந்த இடத்திலேயே வலி தாங்க முடியாமல் அவர் சுருண்டு விழுந்தார்.
பின் அவரை தாக்கிய 5 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். சுஹைல் வலியால் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சுஹைலை தாக்கிய 5 பேரையும் காவத்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.