வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாத்தூர் பகுதியில் மகாலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கொளஞ்சியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சுதாகர் என்ற மகனும் சுதா என்ற மகளும் இருந்துள்ளனர் இந்நிலையில் கல்லாத்தூர் டாஸ்மாக் கடை அருகில் இருக்கும் அரசு பொது கழிப்பறையின் முன்பு சுதாகர் பலத்த ரத்த காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் வாலிபரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் சுதாகர் இறந்து கிடந்த கழிப்பறை வாசல் முன்பு பெண்கள் அணியும் சட்டை மற்றும் ஒரு சிறிய துணி இருந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சுதாகர் கொலை செய்யப்பட்டாரா அல்லது முன்விரோதம் காரணமாக யாரேனும் அவரை அடித்து கொலை செய்தனரா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.