பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான ஆட்சி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் கவிழ்ந்துள்ளது. இதனை அடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி தலைவர் ஷபாஷ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். இம்ரான் கான் கடந்த ஏப்ரல் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலமாக ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தனது அரசை வெளிநாட்டு சதி செய்து கவிழ்த்து விட்டதாகவும் உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என இம்ரான் கான் வலியுறுத்தி வருகின்றார். இதனை தொடர்ந்து பொதுக் கூட்டங்களில் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகின்றார் இந்த சூழலில் பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ-இன்சாப் தலைவரும் முன்னாள் பிரதமருமான இம்ரான் கானின் கட்சியை சேர்ந்த 131 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அந்த இடங்களுக்கு கட்டம் கட்டமாக தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி பாகிஸ்தான் இடைத்தேர்தலில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் தரவுகளின் படி இம்ரான் கான் கட்சியினர் மொத்தம் இடைத்தேர்தல் நடைபெற்ற எட்டு இடங்களில் ஏழு இடங்களில் போட்டியிட்டுள்ளனர். ஆனால் அதில் ஆறு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றதன் மூலமாக பாகிஸ்தான் அரசியலில் இம்ரான் கான் கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருகி இருப்பதை காட்டுகின்றது இந்த சூழலில் பாகிஸ்தானில் விரைவில் பொது தேர்தல் வரவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றார்.
இது பற்றி இம்ரான் கான் செய்தியாளர்களிடம் பேசியபோது, பாகிஸ்தான் அரசை எதிர்த்து நடைபெற உள்ள எங்கள் PTI கட்சியின் ஆசாதி மார்ச் என்ற பிரம்மாண்ட பேரணிக்கான அனைத்து பணிகளும் முடிந்துவிட்டடது. இந்த நிலையில் அடுத்த பொது தேர்தலுக்கான தேதியை அரசு உடனடியாக அறிவிக்க விட்டால் இனியும் கால தாமதிக்காமல் அக்டோபரில் பேரணி நடைபெறும் பேரணிக்கு முன்பு அரசாங்கத்திற்கு இன்னும் சிறிது நேரம் கொடுக்கின்றேன். ஆனால் இது போல அரசியல் குற்றவாளிகளுடன் பேச்சு வார்த்தைக்கு இடம் இல்லை.
மேலும் பாகிஸ்தான் அரசாங்கம் தேர்தலை நடத்த விரும்பவில்லை வெள்ளத்தை ஒரு காரணமாக பயன்படுத்தி உள்ளது PTI பலவீனமாக இருந்த தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த தேசமும் இந்த நாடாளுமன்றத்தையும் இந்த அரசாங்கத்தையும் நிராகரித்திருக்கிறது. இந்த நிலையில் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற விருப்பம் நாடு முழுவதும் இருக்கிறது பாகிஸ்தான் மக்களுக்கு அவர்களின் சுயமரியாதைகான உரிமையை அரசியல் அமைப்பு வழங்கவில்லையா இந்த ஆட்சியாளர்கள் தேர்தலுக்கு பயந்து இருக்கின்றனர். முன்னோக்கி செல்ல வேண்டிய நேரம் இது பாகிஸ்தான் அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச மனித உரிமை அமைப்புகளை அணுகவும் என அவர் பேசியுள்ளார்.