Categories
தேசிய செய்திகள்

பொது நிகழ்ச்சி: மாவட்ட ஆட்சியர் இப்படி வரலாமா?…. கேள்வி எழுப்பும் நபர்கள்….!!!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் திவ்யா ஐயர், தன் 3 வயது மகனை தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வரும்போது உடன் அழைத்து வருவதும், இடுப்பில் குழந்தையை உட்கார வைத்துக்கொண்டு நிகழ்ச்சியில் பேசுவதும் இப்போது பேசுபொருளாகியுள்ளது. அவரது கணவர் உட்பட பலரும் திவ்யாவுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து வருகின்றனர். ஒரு பெண் தன் பல கடமைகளையும் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார். அவரது மிக முக்கிய தருணங்களில் குழந்தையுடன் உடன் இருப்பதும் அவசியமாகிறது எனவும் கூறுகிறார்கள்.

எனினும் உயர்பொறுப்பில் உள்ள ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வது சரியல்ல எனவும் சிலர் கருதுகிறார்கள். அவர்களுக்கு நியூஸிலாந்து பிரதமர் ஜெஸிந்தா தன் மூன்று மாதக் குழந்தையுடன் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியதை நினைவூட்டி பச்சைக்கொடி அசைக்கிறார்கள். இது தொடர்பாக அவரது கணவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே.எஸ். சபரிநாதன் கூறியதாவது, அது வார விடுமுறை நாள், நிகழ்ச்சியோ முழுக்க முழுக்க தனியார் நடத்தும் நிகழ்ச்சி.

அன்றையதினம் அவர் தன் குழந்தையுடன் இருக்கவேண்டும் என்பதால் அவர் குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். இதற்கு பல பேரும் வார இறுதி நாட்களில் அவர் எந்த தனியார் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக்கூடாது. குடும்பத்துடன் செலவிடவேண்டும் என கருத்துகளை பதிவிட்டுள்ளனர். எனினும் பல பேரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வந்தாலும், இதுபற்றி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் திவ்யா எந்த கருத்தும் இதுவரையிலும் கூறவில்லை.

Categories

Tech |