Categories
உலக செய்திகள்

“பொது பதவிகளை வகிக்க வாழ்நாள் தடை”… அர்ஜென்டினா துணை அதிபருக்கு 6 ஆண்டு சிறை…!!!!!

அர்ஜென்டினா துணை அதிபருக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019-ஆம் வருடம் முதல் அர்ஜென்டினாவின் துணை அதிபராக பதவி வகித்து வருபவர் கிறிஸ்டினா பெர்னாண்டஸ். இவர் தொடர்ந்து இரண்டு முறை அந்த நாட்டின் அதிபராகவும் பதவி வகித்துள்ளார். இந்நிலையில் அதிபராக இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி முறைகேடு செய்ததாக கிறிஸ்டினா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.  ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை கிறிஸ்டினா திட்டவட்டமாக மறுத்து வருகின்ற நிலையில் நேற்று முன் தினம் இந்த வழக்கில் இறுதி விசாரணை நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து இருதரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி கிறிஸ்டினாவை  குற்றவாளியாக அறிவித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் அவருக்கு 6 வருடங்கள் சிறை தண்டனை விதித்தும், பொது பதவிகளை வகிக்க வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பை எதிர்த்து  கிறிஸ்டினா மேல்முறையீடு செய்வார் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது.

Categories

Tech |