Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா….? அதிகாரிகள் திடீர் சோதனை….!!!!!!!!!

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா  என அதிகாரிகள் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் குமாரபாளையம், தாளக்கரை, வடவேடம்பட்டி, புத்தி வதம்பச்சேரி, செஞ்சேரி புத்தூர், கள்ளப்பாளையம், ஜல்லிப்பட்டி, பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட மொத்தம் 20 ஊராட்சிகள் இருக்கின்றன. இந்த ஊராட்சிகளில் 75 குடிநீர் மேல்நிலை தொட்டிகள் மற்றும் 40 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் இருக்கிறது. இந்த நிலையில் குடிநீர் தொட்டிகள் மூலமாக பொது மக்களுக்கு தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறதா?

மேலும் தொட்டிகளில் சரியான அளவு பிளீச்சிங் பவுடர் குளோரின் மாத்திரைகள் போடப்பட்டு இருக்கிறதா? என சுல்தான்பேட்டை வட்டார சுகாதார ஆய்வாளர்களான ரவிச்சந்திரன், கார்த்திக் குமார், அப்துல் நசீர், சந்தோஷ்குமார் போன்றோர் அந்தந்த ஊராட்சி செயலாளர்களுடன் சென்று திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது சுகாதார ஆய்வாளர்கள் குடிநீர் தொட்டி பராமரிப்பாளர்களிடம் பேசும்போது, 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தொட்டிகளை மிகவும் சுத்தமாக கழுவி பராமரிக்க வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, காலரா போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கு தண்ணீரில் குளோரினேசன் செய்யவேண்டும். தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |