Categories
தேசிய செய்திகள்

பொது முடக்கம் என்பது கடைசி ஆயுதம்… பிரதமர் மோடி உரை..!!

பொது முடக்கம் என்பது கடைசி ஆயுதமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கொரோனா சூழல் குறித்து இன்று இரவு 8.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார் . கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை நடத்திய நிலையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். முன்னதாக கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மருத்துவ வல்லுனர்கள், தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் மருந்து நிறுவனங்களுடன் ஆலோசித்தார் பிரதமர் மோடி.

இதைத்தொடர்ந்து பொது முடக்கம் என்பது கடைசி ஆயுதமாக இருக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். ஒவ்வொரு மாநிலங்களும் பொது முடக்கத்தை கடைசி ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு பகுதிகளை அதிகரிப்பதன் மூலம் முழு முடக்கத்தை தடுக்க முடியும் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |