தபால் அலுவலகத்தின் பொது வருங்கால வைப்புநிதி திட்டம் பற்றி இப்பதிவில் நாம் தெரிந்துகொள்வோம்.
# போஸ்ட் ஆபிசின் பிபிஎப் திட்டத்தில் குறைந்த தொகையை முதலீடு செய்வதன் வாயிலாக அதிகப்படியான தொகையை வருமானமாக பெற்றுக் கொள்ள இயலும்.
# பல்வேறு முதலீட்டாளர்களின் சிறந்த விருப்பமாக போஸ்ட் ஆபிஸின் பிபிஎப் திட்டம் இருக்கிறது. ஏனென்றால் இவற்றில் அதிகளவு வருமானம் கிடைக்கிறது.
# இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாகவும், சிறந்த வருமானத்தையும் தரக்கூடியதாக உள்ளது. புதியதாக கூட்டு கணக்குகள் திறப்பது இத்திட்டத்தில் தடை செய்யப்படுகிறது.
# மைனர் குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் கணக்கு திறக்க வேண்டுமானால் அவர்களது பெற்றோர்கள் (அ) பாதுகாவலர்கள் பெயரில் கணக்கை திறந்துகொள்ளலாம்.