இஸ்ரேல் அரசு நாளை முதல் மக்கள் பொது வெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் நாளையிலிருந்து பொது மக்கள் முகக்கவசமின்றி பொது வெளியில் செல்லலாம் என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் முகக்கவசம் அணிவது நல்லது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று திரையரங்குகள், பார்ட்டி ஹால் போன்ற உள்புற பகுதிகளில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20ஆம் தேதியன்று கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் திட்டம் இஸ்ரேலில் துவங்கப்பட்டது. மேலும் தொடக்கத்தில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய வல்லரசு நாடுகளை காட்டிலும் அதிவேகமாக நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியது. மேலும் மார்ச் மாத முடிவில் நாட்டில் உள்ள 12 முதல் 16 வயதிற்குள் இருக்கும் குழந்தைகள் அனைவருக்கும் விரைவாக கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவெடுத்திருப்பதாக கூறப்பட்டது.
மேலும் அதிகமாக வயதானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அங்கு பாதிப்புகள் வெகுவாக குறைந்திருக்கிறது. இதனால் கொரோனா விதிமுறைகளை இஸ்ரேல் அரசாங்கம் தளர்த்த தொடங்கியுள்ளது.