Categories
மாநில செய்திகள்

பொது வேலைநிறுத்தம்…. தமிழகத்தில் மாணவர்களுக்கு பாதிப்பில்லை…. பள்ளிக்கல்வித்துறை விளக்கம்….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தொழிற்சங்கங்களின் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தால் இன்று பெருமளவு பேருந்துகள் இயங்காததால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட பொதுமக்கள் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த நிலையில் தமிழகத்தில் போதிய அளவு அரசு பேருந்துகள், பள்ளி வாகனங்கள் ஓடுவதால் மாணவர்களுக்கு பாதிப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

Categories

Tech |