Categories
தேசிய செய்திகள்

அய்யயோ..! வேஷம் கலைந்தது…. மணமகள் மயங்கியது…. திருமணம் நின்றது…!!!!

உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து திருமண நிச்சயித்த தேதியில் மணமகனின் குடும்பத்தினர் ஊர்வலமாக திருமணம் நடக்கும் இடத்திற்குச் சென்றனர். அப்போது, ஊர்வலத்தில் வந்த மாப்பிள்ளை மயங்கி விழுந்துள்ளார். அவர் கீழே விழுந்தவுடன் அவர் வழுக்கை தலையை மறைப்பதற்காக வைத்திருந்த விக்கும் கழன்றி விழுந்துள்ளது. இதனால் மாப்பிள்ளை வழுக்கை தலை என்ற உண்மை பெண்ணின் குடும்பத்தாருக்கும், மணப் பெண்ணுக்கும் தெரியவந்துள்ளது.

இந்த உண்மை தெரிந்த, மணப்பெண் வழுக்கை தலையுள்ளவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர்கள் எவ்வளவு சமாதானம் செய்து அவர் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் நடக்க விருந்த திருமணம் இறுதியில் நின்றுபோனது. இதையடுத்து மாப்பிள்ளை வீட்டால் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.

Categories

Tech |