Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வனில்….. ஐஸ்வர்யா ராய் (நந்தினி) க்கு டப்பிங் கொடுத்த பிரபல நடிகை….. யார் தெரியுமா?….!!!!

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக உருவாகி வருகிறது பொன்னியின் செல்வன் திரைப்படம். எம்ஜிஆர், கமல் ஆகியோர் முயற்சித்து எடுத்து முடியாத இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தற்போது எடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கி இருக்கும் அவர் கல்கியின் நாவலை அப்படியே காட்சிப்படுத்தியுள்ளார். பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை லைக்கா நிறுவனத்துடன் இணைந்து மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் நடிக்கின்றனர். விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, பிரபு, விக்ரம் பிரபு, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். அவருக்கு தமிழ் தெரியாது என்பதால் படத்தில் அவருக்கு யார் டப்பிங் பேசி இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. நந்தினியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கு நடிகையும் டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் பின்னணி குரல் கொடுத்துள்ளார். இதனை தனது instagram பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |