Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா குறித்து ரசிகர்களின் கேள்வி… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கின்ற திரைப்படம் பொன்னியின் செல்வன் -1. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. மேலும் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்த இந்த படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதனை அடுத்து பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த கேள்விகளை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீடு செப்டம்பர் 6ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும்  போஸ்டர் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

Categories

Tech |