பார்த்திபன் நடித்து இயக்கிய இரவின் நிழல் திரைப்படம் சென்ற ஜூலை மாதம் திரைக்கு வந்தது. எனினும் இப்படம் இதுவரையிலும் ஓடிடி தளத்தில் வெளியாகாமல் இருக்கிறது. இந்த திரைப்படம் ஓரிரு நாட்களில் ஓடிடி-யில் வந்துவிடும் என ஏற்கனவே பார்த்திபன் தெரிவித்திருந்தார். இருப்பினும் இதுவரை வரவில்லை. இதனால் பார்த்திபன் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில் “இன்று முதல் பொன்னியின் செல்வன். ஆகவே வரும் வாரம் வருமாம் “இரவின் நிழல்” செய்தி.
பெரு மழையில் தேங்கி விடுகிறது சிறு தொழில் செய்வோரின் வியாபாரம். அன்றைய உணவுக்கு அன்றன்று உழைக்கும் மக்கள் நிலையே கவலைக் கிடம். இடர்காலங்களில் ஒருவருக்கொருவர் கடுகு அளவு உதவுவதும் பெருங்கொடை, குடையாக விரியும் அரசின்உதவிகள். அடுத்த சீசனில் மழைக்கும் முன்பு இடும் கூடுதல் திட்டமிடலால் மக்கள் நலம் கூடும். மழை சாரல் பட சூடான தேனீரோடு துவங்குவோம் இந்நாளை” என்று தெரிவித்துள்ளார். அதாவது பொன்னியின் செல்வனால் இரவின் நிழல் திட்டமிட்டபடி வெளியாகாமல் தாமதமாகி இருப்பதாக பார்த்திபன் சுட்டிக்காட்டி இருக்கிறார்.