Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்….. “சுகாசினி சர்ச்சை பேச்சு”…. ட்ரோல் செய்யும் ரசிகாஸ்….!!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து சுகாஷினி பேசியதை ரசிகர்கள் தற்போது ட்ரோல் செய்து வருகின்றார்கள்.

மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார்.  இந்த நிலையில் பிரமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது மணிரத்தினத்திற்கு பதிலாக அவர் என் மனைவி சுகாஷினி பங்கேற்றார். அவர் பேசிய விஷயம் தான் தற்பொழுது ரசிகர்களின் ட்ரோல்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. அவர் பேசியதாவது, பொன்னியின் செல்வன் உங்க திரைப்படம். நீங்கள் இந்த படத்தை ஆதரிக்க வேண்டும். இது உண்மையான தமிழ் கதை. ஆனால் இத்திரைப்படத்தின் சூட்டிங் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் வெறும் பத்து நாட்கள் மட்டுமே நடந்தது. மற்றபடி படம் முழுக்க முழுக்க ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் தான் நடைபெற்றது. ஆகையால் இது உங்கள் திரைப்படம் என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் சுகாசினியின் சர்ச்சை பேச்சை ட்ரோல் செய்து வருகின்றார்கள்.

Categories

Tech |