Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடிக்க இருந்த பிரபல நடிகர்”…. பேராசையால் இழந்த வாய்ப்பு….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விஜய் சேதுபதி இழந்ததற்கான காரணம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஜய் சேதுபதி. சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது கதாநாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் விஜய் சேதுபதி மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் திரைப்பட வாய்ப்பை இறந்ததற்கான காரணம் பற்றி தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை லைகா புரோடக்சன், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படமானது வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. முதலில் படத்திற்காக படக்குழு விஜய் சேதுபதியிடம் அணுகியபோது அவர் பெரிய தொகையை சம்பளமாக கேட்டதால் படக்குழு மறுத்துள்ளது. இதனால் அவருக்கு பதில் வேறு ஒருவரை படக்குழு ஒப்பந்தம் செய்ததாம். இத்தகவலை கேட்ட ரசிகர்கள் அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு இப்படி ஒரு வாய்ப்பை இழந்து விட்டாரே என கவலைப்படுகின்றனர்.

Categories

Tech |