தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்த்தியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தை ஐமேக்ஸ் தொழில்நுட்பத்துடன் கண்டுக்களிக்கலாம் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. எனவே பொன்னின் செல்வன் திரைப்படம் ஐமேக்சில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிட்டதக்கது.