பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிராதமாக இணையத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவானது பொன்னியின் செல்வன்திரைப்படம். 2 பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி நாளை (30ஆம் தேதி) திரையரங்கில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் பாடல்களும் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இத்திரைப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, லைகா நிறுவனம் 2405க்கும் மேற்பட்ட இணையதளத்தில் பொன்னியின் செல்வன் படத்தை வெளியிடுவதை தடுக்கக் கோரி வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, லைகா நிறுவனம் தரப்பில், பெரும் பொருட் செலவில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.. எனவே திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும் என்று தெரிவித்தது. இதையடுத்து நீதிமன்றம் பொன்னின் செல்வன் திரைப்படத்தை சட்டவிராதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.