பொன்னியின் செல்வன் திரைப்படத்தை கொரோனா காலகட்டத்திலும் 120 நாட்களில் படமாக்கியுள்ளார் மணிரத்தினம்.
பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்தி, மணிரத்தினம் பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களையும் 120 நாட்களில் எடுத்ததாக கூறி இருக்கின்றார். மேலும் கொரோனா காலகட்டத்தில் வெறும் 120 நாட்களில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பிரம்மாண்டமாக படைத்துள்ளார் மணிரத்தினம் என கூறியுள்ளார் கார்த்தி. இதை கேட்ட ரசிகர்கள் மணிரத்தினத்தை வெகுவாக பாராட்டி வருகின்றார்கள்.