பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ட்ரெய்லரை வெளியிடுவார் என செய்தி வெளியாகி இருக்கின்றது. சென்னையில் செப்டம்பர் 6-ம் தேதியும் ஹைதராபாத்தில் 8-ம் தேதியும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கின்றது.