மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. கல்கியின் எழுத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டத்தை திரை வடிவில் காட்சிப்படுத்தியுள்ளார் மணிரத்தினம். செப்டம்பர் மாதம் இறுதியில் படம் வெளியிடப்படும் இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் பாகுபலி, ஆர் ஆர் ஆர் படங்களை மிஞ்சும் அளவிற்கு கிராபிக்ஸ் காட்சிகளும் திரைக்கதையும் அமைக்கப்பட்டு இருக்கிறதாக கூறப்படுகின்றது. மேலும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கின்றது. பெரும் பொருட்சளவில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருக்கிறது. ஏற்கனவே ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் வெளியான பொன்னி நதி, சோழா போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இதில் பொன்னி நதி பாடல் காவிரியின் வருகையையும் சோழ தேசத்தின் வளத்தையும் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.
இந்த பாடலுக்கு போட்டியாக தான் கவிப்பேரரசு வைரமுத்து கவிதை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதாவது திருச்சி காவிரி ஆற்றின் பாலத்தின் மீது நின்று காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் அழகை சொல்லொண்ணா பரவசத்துடன் பார்வையிட்ட அவர் அந்த பரவசத்தை தனக்கே உரிய பாணியில் எழுதி கூர் தீட்டி கவிதை வரிகளாக காவிரியும் சோழ தேசத்தையும் வாழ்த்தி இருக்கின்றார். இந்த நிலையில் ஆரம்பத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து அவர் திடீரென நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவருடைய நீக்கத்திற்கான காரணத்தை இயக்குனர் மணிரத்தினம் இதுவரை கூறவில்லை. மேலும் ஏ ஆர் ரகுமானிடம் கேட்டபோது இது பற்றி மௌனம் சாதித்த அவர் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் விளக்கம் கொடுக்கப்படும் என முடித்துக் கொண்டுள்ளார். இந்த நிலையில் தான் காவிரியில் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கும் நீரின் அழகை கண்டு மெய்சிலிர்க்க அவர் கவிதையை வீடியோ வடிவில் தன்னுடைய twitter பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.