உலகப் புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் பொன்னியின் செல்வன் என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் என்ற படத்தை இரண்டு பாகங்களாக இயக்குகின்றார். இந்தத் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பிரபு, சரத்குமார், அஸ்வின்,கிஷோர் உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் முதல் பாகம் பொன்னியின் செல்வன் 1 வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை அமலாபாலை இயக்குனர் மணிரத்தினம் அருகியுள்ளார். ஆனால் அதற்கு அமலாபால் மறுத்து விட்டார். இது குறித்து தற்போது அவர் கூறுகையில், 2021 ஆம் ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க என்னை மணிரத்தினம் அணுகினார். ஆனால் அதில் நடிப்பதற்கான மன ஆற்றல் அப்போது எனக்கு இல்லை. அதனால் முடியாது என்று கூறிவிட்டேன் என அமலா பால் கூறியுள்ளார்.