Categories
சினிமா

“பொன்னியின் செல்வன்” படத்தின் ராட்சஸ மாமனே பாடல்…. வெளியான வீடியோ…. வைரல்….!!!!

கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “பொன்னியின் செல்வன்”. 2 பாகங்களாக வெளிவரும் இந்த படத்தின் முதல் பாகம் வரும் 30-ஆம் தேதி திரைக்குவர இருக்கிறது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யாராய், திரிஷா உட்பட முன்னணி திரைப் பிரபலங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தின் “ராட்சஸ மாமனே” எனும் பாடல் வெளியாகி இருக்கிறது. பாடலாசிரியர் கபிலன் வரிகளில் ஸ்ரேயா கோஷல், பாலக்காடு ஸ்ரீராம், மகேஷ் வினாயக் ராம் போன்றோர் பாடியுள்ள இப்பாடல் தற்போது சமூகவலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |