பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சிம்பு நடிக்க கூடாது என ஜெயம் ரவி கூறியதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக விஜய், மகேஷ் பாபு, நயன்தாரா, சிம்பு என பல நடிகர்களும் பேச்சு வார்த்தையில் மணிரத்தினம் ஈடுபட்டதாகவும் பல காரணங்களால் பல நடிகர்கள் திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாக செய்தி வந்தது. ஆனால் இந்த படத்தில் சிம்பு நடித்தால் நான் நடிக்க மாட்டேன் என ஜெயம் ரவி கூறியதால் தான் இப்படத்தில் சிம்புவை மணிரத்தினம் நடிக்க வைக்கவில்லை என சென்ற சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வந்தது.
இந்த நிலையில் இது குறித்து ஜெயம் ரவி விளக்கம் அளித்திருக்கின்றார். அவர் கூறியுள்ளதாவது, சிம்புவை நான் ஏன் நடிக்க கூடாது என சொல்லப் போகிறேன். அப்படி நான் சொன்னால் மணிரத்தினம் கேட்பாரா? நானே பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒரே ரோலில் தான் நடித்திருக்கின்றேன். அப்படி உள்ள நிலையில் சிம்புவை நடிக்க வேண்டாம் என நான் எப்படி சொல்லியிருப்பேன். இந்த செய்தி பரவ ஆரம்பித்ததும் சிம்பு எனக்கு போன் செய்தார். அப்போது நீ அப்படியெல்லாம் செய்திருக்க மாட்டாய் என எனக்கு தெரியும். எனவே அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாதே என கூறியுள்ளார் ஜெயம் ரவி. இந்த நிலையில் பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.