Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பை நிறைவு செய்த பிரபல நடிகர்… வெளியான சூப்பர் தகவல்…!!!

நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இரு பாகங்களாக தயாராகும் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்ய லட்சுமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் .

 

Chiyaan Vikram practises sword fighting at Ponniyin Selvan shoot. Unseen  video - Movies News

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இந்த படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்து வந்த ஜெயம் ரவி சமீபத்தில் தனது படப்பிடிப்பை நிறைவு செய்தார். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்து வந்த விக்ரம் தனது படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |