கல்கி எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இவற்றில் நடிகர்கள் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்து இருக்கின்றனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இப்படம் வெளியாக இருக்கிறது. இதனையொட்டி படக்குழுவினர் இப்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப் பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வாரம் வெளியாக இருக்கும் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்கு அரசாங்கம் நிர்ணயித்துள்ள டிக்கெட் விலையைவிட கூடுதலாக வசூலிக்ககூடாது என லைகா நிறுவனத்திடம் மணிரத்னம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. டிக்கெட் விலையானது அதிகமாக இருந்தால் பேமிலி ஆடியன்ஸ் திரையரங்குக்கு வரமாட்டர்கள் என்பதால் மணிரத்னம் இந்த அதிரடி உத்தரவை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. யுஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 47 நிமிடங்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.