Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன்… “படம் பார்க்க நானும் என் அம்மாவை அழைத்து வருவேன்”… பிரபல நடிகர் ட்வீட்பதிவு…!!!!!

தமிழ் சினிமா ரசிகர்கள் பெருமை கொள்ளும் அளவிற்கு பிரம்மாண்டமாக தயாராகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த பிரம்மாண்ட கதையை தற்போது படமாக இயக்கி இயக்குனர் மணிரத்தினம் பாதி சாதனையை படைத்துள்ளார். படம் ரிலீஸ் ஆகி மக்களிடம் சென்று விட்டால் முழு சாதனையை அடைந்து விடுவார். பல கோடி மக்கள் பார்த்து படித்து ரசித்த கல்கி எழுதிய இந்த பொன்னியின் செல்வன் கதையை அடித்துக் கொள்வதற்கு இதுவரை வேறு எந்த கதையும் வந்தது இல்லை. இந்த சூழலில் வருகிற முப்பதாம் தேதி இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இதற்கிடையே பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பார்ப்பதற்கு இதுவரை  வராத வயது முதியவர்களும் தியேட்டருக்கு வர இருக்கின்றார்கள். அதனால் அவர்களை கனிவாக கவனிக்கும்படி தியேட்டர் உரிமையாளர்களுக்கு ஹரி என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில் அந்த நபர் பதிவிட்ட டுவிட்டில் நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், தனியார் திரையரங்கை டேக் செய்து பதிவிட்டு இருந்தார். அந்த ரசிகருக்கு பொன்னியின் செல்வன் நடிகர் விக்ரம் பதில் அளித்துள்ளார். அதற்கு பதில் அளித்து பேசிய விக்ரம் சித்தர் பக்கத்தில் உங்களின் அன்பிற்கும் அக்கறை குறிப்பிற்கும் நன்றி ஹரி எனக் கூறியுள்ளார். இந்த பிரம்மாண்ட வரலாற்றை கண்டு களிக்க நிறைய மகன்களும் மகள்களும் தங்கள் பெருமைமிக்க தாய்கள் மற்றும் தந்தைகளை தியேட்டருக்கு அழைத்து வருவார்கள். மேலும் படத்தை பார்க்க எனது தாயும் தியேட்டருக்கு வருவார்கள் என பதிலளித்துள்ளார்.

Categories

Tech |