தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படக்குழுவிற்கு பிரபலங்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி திமுக எம்பி திருச்சி சிவா பொன்னியின் செல்வன் பாராட்டாவிட்டால் குற்ற உணர்வு ஏற்படும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில், கல்லூரி படிப்பின் போது ஓராண்டு கால மிசா சிறைவாசகத்தின் போதும் படித்த நூல் கல்கியின் பொன்னியின் செல்வன் முதல் முறை படித்து முடித்த பின் அதில் வரும் கதாபாத்திரங்கள் நெஞ்சில் நிழலாட உறக்கம் தொலைத்த இரவுகளை போலவே இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் பொன்னியின் செல்வன் படம் பார்த்த அன்றும் இரவு உறக்கம் இழந்தேன். இதற்கு மேல் இத்தனை பெரிய வரலாற்றுப் புதினை திரையில் கொண்டு வர வேண்டுமென்று எதிர்பார்க்காத இயலாது. அதனைத் தொடர்ந்து எம்ஜிஆர் நினைத்து, கமலஹாசன் விரும்பி பல காரணங்களால் உருவாக்க முடியாது இந்த காவியத்தை திரைப்படமாக்கிய மணிரத்தினத்தை பாராட்டுவதே ஒரு தமிழனின் கடமையாக உணர்கிறேன்.
100% என்பதை வரலாற்றிலும் எதிர்பார்க்க முடியாது. எனக்கு தெரிந்து எழுத்து வடிவத்தில் பெரும் வரவேற்பினை பெற்ற பல கதைகள் திரையில் வெற்றி பெறாமல் போய் இருக்கின்றன. அகிலன், ஜெயகாந்தன், சுஜாதா, ஏன் கல்கியும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. விமர்சனங்களை சந்திக்காத தலைவர்களும் படைப்புகளும் இருக்கவே முடியாது. ஆனால் பாராட்ட வேண்டியதை பாராட்டாமல் குறைகளை மட்டுமே சூட்டுவதை ஏற்கவும் இயலாது. இதனையடுத்து சிலர் கைவிட்ட முயற்சியினை பலர் முயல முன் வராத இந்த பெரும் படைப்பிற்கான முனைப்பிற்கும், உழைப்பிற்கும், வெளிச்சத்திற்கும் வராத தொழில்நுட்ப கலைஞர்களின் திறமைக்கும் பாராட்டாமல் இருப்பதே குற்றமாய் உணர்கிறேன். இதற்கும் விமர்சனம் வரக்கூடாது அதையும் உணர்ந்து இந்த பதிவு என்று தெரிவித்துள்ளார்.