Categories
சினிமா தமிழ் சினிமா

பொன்னியின் செல்வன் விழாவில்…. “ரஜினி காலை தொட்டுக் கும்பிட்ட ஐஸ்வர்யா ராய்”… பாராட்டும் ரசியாஸ்….!!!!!

பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினியை பார்த்ததும் காலை தொட்டு கும்பிட்டு ஐஸ்வர்யா ராய் ஆசி பெற்றுள்ளார்.

பிரபல இயக்குனர் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக எடுத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்ற செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரஜினி மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராயும் பங்கேற்றிருந்தார். அவர் ரஜினியை பார்த்ததும் காலை தொட்டு கும்பிட்டு ஆசீர்வாதம் பெற்றார்.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை இணையத்தில் வெளியிட்டு ரஜினி ரசிகர்கள் ஐஸ்வர்யா ராயை பாராட்டி வருகின்றார்கள். ஐஸ்வர்யா ராய் இவ்வாறு காலை தொட்டு கும்பிட்டது முதல் முறை அல்ல. இதனிடையே ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருக்கிறாரா என பேச்சு கிளம்பியுள்ளது. அவர் கர்ப்பமாக இருப்பதால்தான் கொஞ்சம் வெயிட் போட்டு இருப்பதாகவும் சுடிதார் அணிந்து வந்து துப்பட்டாவை வைத்து வயிறை மறைத்திருப்பதாகவும் பேசுகின்றார்கள்.

Categories

Tech |