Categories
சினிமா தமிழ் சினிமா

‘பொன்னியின் செல்வன்’…… வெளியான நடிகர் விக்ரம் VIDEO….. செம வைரல்…..!!!!!

பிரபல இயக்குனர் மணிரத்தினர் அவர்களின் கனவு திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகவுள்ளது. சோழர்களைப் பற்றி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இந்த திரைப்படம் உருவாகியுள்ளது . இந்த படத்தில் ஏராளமான கதாபாத்திரங்களுக்கு பல மொழி நடிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி ஜெயம் ரவி, கார்த்திக், விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் அரசர்களாகவும், இளவரசிகளாகவும் வீரர்களாகவும் ஜொலித்து வருகின்றனர். தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த ஐந்து நாட்களாக படத்தில் இடம்பெற்றுள்ள விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், திரிஷா, ஐஸ்வர்யாராய் ஆகியோரின் கேரக்டர்களை பட குழுவினர் வெளியிட்டனர்.

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில், ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்திற்காக விக்ரம் 5 மொழிகளில் டப்பிங் பேசும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

Categories

Tech |