தமிழ் திரையுலகில் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் புகழ் பெற்றவர் இயக்குனர் மணிரத்னம். இவர் தற்போது கல்கியின் புகழ்பெற்ற “பொன்னிய செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு பொன்னியன் செல்வன்-1 திரைப்படத்தை இயக்கிவருகிறார். இந்த திரைப்படத்தில் முன்னணி திரை பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்த்தியுள்ளது. இது இரண்டு பாகங்களாக உருவாக உள்ளது. இதன் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனை முன்னிட்டு சென்னை தரமணியில் பொன்னியின் செல்வம் இயக்குனர் மணிரத்தினம் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், பழங்காலத்தில் எடுக்கப்பட்ட சரித்திர படங்களின் ஆடை போல் இல்லாமல் நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் ஆடைகளும் வடிவமைக்கப்பட்டது. தூய தமிழ் வசனங்கள் தான். ஆனால் சரளமாக பேச முடியும் நடிகர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் இருக்க வசனம் தூய தமிழ் மொழி தான் எழுதப்பட்டது. இந்த படத்தில் நாவலுக்கு ஏற்ற வகையில் என் பாணியும் கலந்து இருக்கும். புத்தகத்தை படித்த பாதிப்பில் என்னுடைய பங்களிப்பு இருக்கும். 5 பாக புத்தகத்தை இரண்டு பாகம் 3 மணி நேரம் படமாக தந்து உள்ளோம். அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் கேட்ட கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தால் அதை மாற்ற வேண்டிய நிலை வரும். இது சரியாக இருக்காது எல்லாரும் என்னை பாடாய் படுத்தினார்கள். நானும் எல்லாரையும் பாடாய்படுத்தினேன். வசனங்களை ஜெயமோகன் சிறப்பாக செய்துள்ளார். மேலும் கொரோனா காலத்தில் நடிகர் குண்டாகி விடுவார்களோ? என்று தான் பயந்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.