மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள பொன்னியன் செல்வன் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 150 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வெள்ளியன்று வெளியான இப்படம் முதல் நாளில் ரூ. 80 கோடி வசூலித்திருந்தது. இந்த சூழலில் நேற்று ஒரே நாளில் ரூ.70 கோடி வசூலை இப்படம் குவித்துள்ளது. தொடர் விடுமுறை மற்றும் பண்டிகைகள் காரணமாக இந்த வசூல் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.